இன்னும் 9 நாட்களில் விடுதலையாகும் சசிகலா! அதற்கடுத்த சில நாட்களில் விடுவிக்கப்படும் அவரின் உறவுக்கார பெண்

Report Print Raju Raju in இந்தியா
144Shares

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா வரும் 27ஆம் திகதி விடுதலை ஆகவுள்ள நிலையில் அவர் உறவினரான இளவரசி பிப்ரவரி 5ஆம் திகதி விடுதலையாவார் என தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட நான்காண்டு கால சிறைத்தண்டனை வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் 27-ல் சிறையிலிருந்து சசிகலா வெளிவரும் நிலையில், பிப்ரவரி 5-ல் இளவரசி விடுதலையாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அபராதத் தொகையான 10 கோடி ரூபாய் செலுத்தாததால் சுதாகரன் விடுதலை தாமதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்