சிவகங்கையில் 7 வயது பெண் குழந்தையை 2 ஆண்டுகளாக பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துவந்த ஐ.ஜி அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக மாவட்டம் சிவகங்கையில் உள்ள காரைக்குடி பொன்நகர் பகுதியில் வசிப்பவர் பாலாஜி (40). இவர் மதுரை ஐ.ஜி அலுவலகத்தில் தட்டச்சராகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். மனைவி சத்யா அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
பாலாஜியின் வீட்டிற்கு அருகிலேயே அவரது நண்பர் வசிக்கிறார். அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், மாட்டுப் பொங்கல் தினத்தன்று பாலாஜி தனது நண்பர் வீட்டுக்கு வாழை இல்லை வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது, பாலாஜியைப் பார்த்த 7 வயது சிறுமி பயத்தில் பதற்றமடைந்த நிலையில் ஓடிப்போய் அவரது தாயை இருக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளார்.
இதனைப் பார்த்து சந்தேகமடைந்த தாய், பாலாஜி அங்கிருந்து கிளம்பியதும் சிறுமியை தனியா அழைத்து சென்று ஏன் பாலாஜியைப் பார்த்து பயந்தாய் எனக் கேட்டுள்ளார்.
அப்போது சிறுமி கூறிய விடயங்கள் அவருக்கு தூக்கிவாரிப்போட்டது.
பாலாஜி 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியிடம் பொம்மைத் துப்பாக்கியை காட்டி பெற்றோரை சுட்டுக் கொன்று விடுவதாக அச்சுறுத்தியுள்ளார். அதை உண்மை என நம்பிய சிறுமியும் பயத்தில், பாலாஜி சொல்வதைக் கேட்பதாகக் கூறியுள்ளார்.
இதனைப் பயன்படுத்தகிக்கொண்ட பாலாஜி, சிறுமி என்றும் பாராமல் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும் நடந்ததை பெற்றோரிடம் கூறினால் சுட்டு விடுவதாக மிரட்டிவந்துள்ளார். இதனால், சிறுமி பயத்தில் பெற்றோரிடம் எதையும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இதனை முழுவதுமாக விசாரித்த சிறுமியின் பெற்றோர், சிறுமி கூறிய அனைத்தையும் போனில் பதிவு செய்துகொண்டு, காரைக்குடி காவல் நிலையத்தில் கொடுத்து புகார் அளித்தார்.
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் பாலாஜியின் வீட்டுக்கு சென்று அவரைத் தக்க முயன்றனர்.
ஆனால், நடந்ததைக் கேட்டு கடும் கோபத்துக்கு ஆளான பாலாஜியின் மனைவி, தானே கணவரை பொலிஸில் ஒப்படைப்பதாக வீட்டின் அறையில் வைத்து புட்டியுள்ளார்.
பின்னர், பொலிஸ் வந்ததும் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது, பாலாஜிக்கும் தனக்கும் இனி எந்த உறவும் கிடையாது என பொதுவெளியில் அவரது மனைவி சத்யா கூறியுள்ளார்.
இதனையடுத்து, பாலாஜியை கைது செய்து கொண்டுசென்ற பொலிஸார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, சிறையில் அடைத்தனர்.
நண்பனின் மகள் என்றும், 7 வயதே ஆனா சிறுமி என்றும் பாராமல் பாலாஜி செய்த கொடூர செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.