கமல்ஹாசனுக்கு நடந்து முடிந்த அறுவை சிகிச்சை! அவர் உடல் நிலை குறித்து மகள் ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை

Report Print Raju Raju in இந்தியா
962Shares

நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ள நிலையில் அவர் உடல்நிலை குறித்து மகள் ஸ்ருதிஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு தனது வீட்டின் மாடிப்படியில் வழுக்கி விழுந்ததில் நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் அடிப்பட்டது. இதற்காக அப்போதே சிகிச்சை மேற்கொண்டார்.

பின்னர் ஒரு அறுவை சிகிச்சையும் அவருக்கு நடந்தது. அதன்பின் அரசியல், சினிமா என பிஸியாக இருந்தார். சில தினங்களுக்கு முன், மீண்டும் காலில் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கிறது.

அதனால் சில நாட்கள் ஓய்வில் இருக்க போகிறேன்'' என கமல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அந்த அறுவை சிகிச்சை தற்போது நடந்து முடிந்துள்ளது.

இதுகுறித்து கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர் ஜே.எஸ்.என்.மூர்த்தி ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் குமார் தலைமையில் அப்பாவிற்கு காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்தது. அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார்.

மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் அவரை பார்த்துக் கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்கு பின் அப்பா வீடு திரும்புவார். அதன்பின் சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் மக்களை சந்திப்பார். அனைவரது அன்பு, பிரார்த்தனைக்கு எங்களது நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்