சித்தாள் பெண்ணுக்காக நண்பனுக்கு நடந்த கொடூரம்; பொலிஸில் ஓவர் ஆக்டிங் செய்து மாட்டிக்கொண்ட வாலிபர்!

Report Print Ragavan Ragavan in இந்தியா
402Shares

தேனியில் சித்தாள் பெண்ணுடன் நண்பன் உல்லாசமாக இருப்பதை பார்த்துவிட்டு தானும் ஆசையை தீர்த்துக்கொள்ள நினைத்த வாலிபருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாவட்டம் தேனியில், கீழச்சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் அப்பகுதியில் கட்டட வேலை பார்த்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் அவருடைய நண்பர் ரவிக்குமார் (25) கடந்த 3 மாதங்களாக பிரபுவுடன் சேர்ந்து கட்டட வேலை பார்த்து வந்தார். இருவரும் வேலை முடிந்ததும் ஒன்றாக மது குடிப்பது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த 10-ஆம் திகதி வேலைக்கு சென்ற ரவிக்குமார் வீடு திரும்பவில்லை. தேடிப்பார்த்த அவரது பெற்றோர் மறுநாள் இது குறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த சூழலில் அப்பகுதியில் இருந்த புதரில் ஒரு பிணம் முகம் சிதைந்து இருப்பதாக்க பொலிஸாருக்கு தாவல் கிடைடித்தது.

அதனைத் தொடர்ந்து ரவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து பார்த்தது அது தங்கள் மகன் தான் என உறுதி செய்தனர்.

ரவிக்குமார் முகம் முழுவதும் சிதைந்த நிலையில், வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலையாளியை குறித்து விசாரித்து வந்தனர்.

அப்போது எல்லோரையும் விசாரிப்பது போலவே ரவியின் நண்பன் பிரபுவை பொலிஸார் விசாரித்துள்ளனர்.

ஆனால் சற்று வித்தியாசமாக நடந்துகொண்ட பிரபு, ரவிக்குமாரை கொலை செய்தவர்களை பிடிக்க பொலிசாருக்கு உதவுவது போல நாடகமாடிய பிரபு, மோப்ப நாயை வரவையுங்கள், கடைசியாக ரவிக்குமார் பேசிய செல்போன் எண்ணை ஆய்வு செய்யுங்கள் என்றெல்லாம் ஓவர் ஆக்டிங் கொடுத்துள்ளார்.

பொலிஸாருக்கு பிரபு மீது சந்தேகம் வலுவானது. அவரை மடக்கி அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியத்தில், நடந்த உண்மைகள் வெளி வந்தன

​பிரபுவின் வாக்குமூலத்தின் படி, கட்டட வேலை செய்து வந்த பிரபுவுக்கு அங்கு வேலை பார்த்த சித்தாள் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நெருக்கமாகி இருவரும் பல நேரங்களில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதனை ஒருநாள் ரவி பார்த்துவிட, அவருக்கும் அந்த பெண் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அவரும், அந்தப் பெண்ணிடம் சென்று, நீ என்னிடமும் உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறி ஆசைக்கு இணங்க வைத்துள்ளார் ரவிக்குமார்.

இந்த விவகாரம் பிரபுவுக்கு தெரிய வர, ஆத்திரத்தில் ரவிக்குமாரின் கதையை முடிக்க முடிவெடுத்துள்ளார்.

இந்த சூழலில் சம்பவதன்று மதுகுடிக்க ரவிக்குமாரை அழைத்துள்ளார் பிரபு. அப்போது கடுமையான போதையில் இருந்த ரவியை, மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார் பிரபு.

பின்னர் அடையாளம் தெரியாக்கூடாது என்பதற்காக, ரவிக்குமாரின் முகத்தை சிதைத்துவிட்டு, அந்த பகுதியில் மிளகாய் பொடியை தூவி சென்ருள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் போலீசார் பிரபு மீது கொலை, ஆதாரங்களை மறைத்தல், வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து கைது செய்தனர்.

பெண்ணுக்காக ஆசைப்பட்டு நண்பர்களுக்குள் ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்