சசிகலா விடுதலை குறித்து வந்த அதிகாரப்பூர்வ கடிதம்: தேதியும் அறிவிப்பு: உச்சகட்ட மகிழ்ச்சியில் உறவுகள்

Report Print Santhan in இந்தியா
1188Shares

சசிகலா விடுதலையாகும் திகதி உறுதியாகிவிட்டதாக, வழக்கறிஞர் ராஜா செந்துர்பாண்டியன் கூறியுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, 4 ஆண்டுகள் சிறை தண்டனை காலம் முடிவடைந்து விரைவில் வெளிவரவுள்ளார்.

ஆனால், அவர் விடுதலையாகும் திகதி மட்டும் உறுதியாகமல் இருந்தது.

இதையடுத்து தற்போது வரும் 27-ஆம் திகதி சசிகலா விடுதலையாவது உறுதி எனவும் அதன் அலுவல்பூர்வ கடிதம் கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அதை சசிகலாவின் வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.

மேலும், சசிகலா வரும் 27-ஆம் திகதி காலை 10 மணிக்கு விடுதலை செய்யப்படுகிறார் எனவும், இது தொடர்பாக கர்நாடக மாநில சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக வழக்கறிஞர் ராஜா செந்துர்பாண்டியன் கூறியுள்ளார்.

இந்த செய்தியை அறிந்தவுடன் சசிகலா உறவுகள் மற்றும் தொண்டர்கள் பலரும் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்