பள்ளி செல்வதில் தகராறு: விஷம் குடித்த தாய்- மகள் பலியான பரிதாபம்

Report Print Fathima Fathima in இந்தியா
278Shares

தமிழகத்தின் தேனியில் பள்ளிக்கு செல்ல மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

தேனியின் ஆண்டிபட்டி முதலக்காம்பட்டியை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 38). இவரது மகள் பிரியதர்ஷினி (17).

அவினாசியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

நேற்று தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த நிலையில், பிரியதர்ஷினி பள்ளி செல்வதில் தகராறு ஏற்பட்டது.

இதனால் மன வேதனையடைந்த மலர்க்கொடி, பிரியதர்ஷினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்