பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு? சிறை நிர்வாகம் வெளியிட்ட தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா
182Shares

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு சற்று உடல்நிலை குறைபாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ராஹரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அவருடைய நான்கு ஆண்டு சிறை தண்டனை வருகிற 27ஆம் திகதி நிறைவுபெறுகிறது. பெங்களூரு சிறையில் இருந்து 27ம் திகதியன்று சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

அவருக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவர்கள் சசிகலாவின் உடல்நிலையை பரிசோதனை செய்து தற்போது கண்காணித்து வருகின்றனர்.

இருப்பினும் வெளியே இருந்து மருத்துவ குழுவினர் சென்று பரிசோதித்து வருவதாகவும், கவலைப்படும் படியாக பாதிப்பு ஏதுமில்லை எனவும் சிறை மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்