சசிகலா விடுதலையாவதில் எந்த சிக்கலும் இல்லை: வழக்கறிஞர் சொன்ன அதிமுக்கிய தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா
62Shares

சசிகலா விடுதலையாவதில் எந்த சிக்கலும் இல்லை என அவரது வழக்கறிஞர் அசோகன் தெரிவித்துள்ளார்.

வருகிற 27 ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக இருந்த சசிகலா, கடும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது, அத்துடன் நிமோனியாவும் தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அவசர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் அசோகன் கூறுகையில், திட்டமிட்டபடி சசிகலா 27ம் தேதி விடுதலை ஆவார். அதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை.

27ம் தேதிக்கு பிறகு சசிகலாவை ஒருநாள் கூட சிறையில் வைத்திருக்க எவ்வித அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தற்போது விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவை மணிபால் மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்