தமிழகத்தில் டயரில் தீக்கொளுத்தி யானை மீது வீசிய கொடூரத்தின் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
நீலகிரியில் மாவநல்லா பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு யானையை காட்டுக்குள் திருப்பியனுப்ப டயரில் தீவைத்து கொளுத்தி யானை மீது வீசியதில் அதன் காது, முதுகு பகுதிகளில் காயமடைந்தது.
3 மாதங்களாக முதுகில் காயங்களுடன் சுற்றித்திரிந்த யானை ஜனவரி 19ஆம் திகதி மரணமடைந்தது.
இதன் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், தற்போது காட்டு யானையின்மீது தீவைத்ததாக 2 பேரை வனத்துறை கைதுசெய்துள்ளது.
Absolutely horrific. The people running a private resort throw a lit-tyre on a 50-year-old #elephant in the #Nilgiris, that died as a result of the injuries it suffered. @SanctuaryAsia @nehaa_sinha @elephantfamily @Mugilan__C pic.twitter.com/YE8UI8dBIi
— Rohan Premkumar (@ThinBrownDuke26) January 22, 2021
இந்த சம்பவத்தில் ரிசார்ட் உரிமையாளர் ரைமன், பிரசாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.