இரண்டாவது திருமணம் செய்ய கொள்ளப் போவதாக மிரட்டிய கணவனுக்கு நேர்ந்த கதி! மனைவியின் திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா
524Shares

தமிழகத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிய கணவனை மனைவி துடி துடிக்க வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்தவர் பிரபு. இவருக்கு உமா மகேஸ்வரி, என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், தனியார் மில்லில் வேலை செய்து வந்த பிரபுவுக்கும், அவரது மனைவி உமா மகேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒரு கட்டத்தில், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மனைவி உமா மகேஸ்வரி, தனது கணவர் பிரபுவை வெட்டிப்படுகொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவல் பொலிசாருக்கு தெரியவர, உடனடியாக விரைந்து வந்த பொலிசார் உடலகைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின் உமாமகேஷ்வரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உமா மகேஷ்வரி, சம்பவ தினத்தன்று கணவர் பிரபு மதுபோதையில் இருந்ததாகவும், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறினார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தகராறு முற்றியதால், கோபத்தின் உச்சிக்கு சென்ற நான் அவரை கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்