நாம் தமிழர் கட்சியின் சீமான் தொண்டர்களுக்கு எச்சரிக்கை! கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல் மிதித்துவிடுவேன் என ஆதங்கம்

Report Print Santhan in இந்தியா
333Shares

என் பேச்சை தொண்டர்கள் கேட்காவிட்டால் கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல் மிதித்துவிடுவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கு என்று தனி வாக்கு வங்கி உள்ளது. குறிப்பாக தற்போது இருக்கும் இளைஞர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், யாரும் எதிர்பார்க்காத வகையில், மிகப் பெரிய மூன்றாவது கட்சியாக உருவெடுத்தது.

இதனால் இந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தான் வாக்களர்கள் சிலரின் பெயரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

அதில் எப்போதும் போல் பெண்களுக்கு சம உரிமை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான், நாம் தமிழர் கட்சிக்கு நான் தான் கட்டளை தளபதி. நான் போட்ட கோட்டிற்குள் தான் நீங்கள் செயல்பட வேண்டும். உங்கள் கருத்தை கேட்டு நான் நடக்க மாட்டேன். நான் ஓடும் திசையில் தான் நீங்களும் ஓட வேண்டும்.

நான் அறிவிக்கும் வேட்பாளர்கள் குறித்து தொண்டர்கள் யாரும் என்னிடம் கேள்வி கேட்க கூடாது. வேட்பாளர்கள் அறிவிப்பை யாரேனும் எதிர்த்தால் கிரீஸ்டப்பாவை மிதிப்பது போல் மிதித்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்