வெளியிலிருந்து பார்த்தால் ஜெராக்ஸ் கடை; உள்ளே ரகசிய அறைக்குள் மகளை வைத்து தாய் செய்த வேறு தொழில்!

Report Print Ragavan Ragavan in இந்தியா
0Shares

மதுரையில் ஜெராக்ஸ் கடை நடத்துவது போல் சொந்த மகளை வைத்து பாலியல் தொழில் செய்துவந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக மாவட்டம் மதுரையில், சின்னசொக்கிக்குளத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி, அவர் மதுரை வடக்கு மாசி வீதியில் எலுமிச்சை சந்தை பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று நடத்திவந்துள்ளார்.

ஆனால், அந்தக் கடைக்கு அடிக்கடி ஒரு தினுசாக ஆண்கள் அதிகமாக வந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

அவர்கள் கடையில் எதோ வித்தியாசமாக நடப்பதாக பொலிஸுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிஸ் ஒருவர் மஃப்டியில் அந்தக் கடைக்கு சென்று கண்காணித்ததில் அங்கு விபச்சாரம் நடப்பதாக உறுதிசெய்துள்ளார்.

இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக அங்கு விரைந்து சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது கடைக்குள் ஒரு சின்ன அறையில் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. அதனையடுத்து தமிழ்ச்செல்வி மற்றும் புரோக்கர் ஞானஸ்கந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்தது.

தமிழ்ச்செல்வி பணத்துக்கு ஆசைப்பட்டு தனது சொந்த மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

கல்லூரியில் படித்துவரும் 20 வயதான அப்பெண்ணுடன் 10 நிமிடங்கள் உல்லாசமாக இருப்பதற்கு,தமிழ்ச்செல்வி 23 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயித்துள்ளார் என தகவலையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஜெராக்ஸ் கடையை வாடகைக்கு எடுத்து அங்கு பாலியல் தொழில் செய்து வந்ததுமட்டுமல்லாமல், பெண்ணொருவர் பணத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற மகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி ஒரு கொடூர தாயான தமிழ்ச்செல்வியையும், புரோக்கர் ஞானஸ்கந்தனையும் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்