குளத்தில் குளித்துக் கொண்டிருந்த மூவர் நொடிப்பொழுதில் பலியான சோகம்

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares

தமிழகத்தில் நீச்சல் பயிற்சி எடுத்துக் கொண்ட போது மூவரில் குளத்தில் மூழ்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள காவேரிசெட்டியப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம். அவருடைய மனைவி ராதா (வயது 38).

ராதா தனது மகள் பவ்யா (13) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகள் சரஸ்வதி (13) ஆகியோருடன் நேற்று அப்பகுதியில் உள்ள செங்குளத்துக்கு குளிக்க சென்றார்.

சிறுமிகள் இருவரும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர், அப்போது ராதா அவர்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது.

அப்போது தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள் நீரில் மூழ்கியுள்ளனர், இதைப்பார்த்த ராதா பதறிப்போய் அவர்களை காப்பாற்ற முயன்ற போது அவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

இதை பார்த்த கிராம மக்கள் மூவரையும் மீட்க முயன்றனர், அதற்கும் மூவரும் தண்ணீர் மூழ்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்ந்து சுமார் ½ மணிநேர தேடுதலுக்கு பிறகு 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்