பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி துடிதுடிக்க நரபலி கொடுத்த பெற்றோர்- பகீர் சம்பவம்

Report Print Ragavan Ragavan in இந்தியா
0Shares
இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில், மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் உள்ள ஆசிரியர் காலனியில் புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா தம்பதியினர் வசித்து வருகினற்னர்.

புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியில் துணை முதல்வராகவும், பத்மஜா மாஸ்டர் மைண்ட் பள்ளியின் முதல்வராகவும் உள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் அலேக்கியா (27) MBA படித்துவிட்டு வடஇந்திய மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகள் சாய் திவ்யா (22) ஏ.ஆர். ரகுமானின் இசைப் பள்ளியில் படித்து வந்துள்ளார்.

இந்த லக்கடவுனில் இருவரும் கடந்த 9 மாதங்களாக பெற்றோர்களுடன் ஆந்திராவில் தங்கியுள்ளனர்.

ஆன்மீகத்தை அதிகம் நம்பும் புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா இருவரும் சமீப நாட்களாக வீட்டில் சில பூஜைகளை நடத்திவந்துள்ளனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி என்ற சூழலில், வீட்டில் ரகசிய சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.

திடீரென இவர்களது வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பயந்துபோன அக்கம் பக்கத்தினர், காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சிறிது நேரத்தில் அவர்களது வீட்டுக்கு வந்த பொலிஸ் வீட்டுக் கதவை தட்டியுள்ளனர். ஆனால் திறக்க மறுத்த தம்பதி ஏடாகூடமாக பதிலளித்துள்ளார்.

சந்தேகமடைந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொடு உள்ளே சென்று பார்த்தால், இரண்டு மகள்களும் இரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளனர்.

அவர்களது உடலை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல போலீசார் முற்பட்ட நிலையில், தம்பதிகள் இருவரும் 'இந்த ஒரு இரவு காத்திருங்கள், எங்கள் குழந்தைகள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள்" என்று கூறி உடல்களை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக பொலிஸார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அலேக்கியா மற்றும் சாய் திவ்யாவின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

மேற்பட்ட விசாரணையில், வீட்டிற்குள் பூஜைகளை செய்து கொண்டிருந்த தம்பதி, தங்களது இரண்டு மகள்களையும் முதலில் நிர்வாணமாக்கி தலையை மொட்டை அடித்துள்ளனர். பின்னர் பூஜையில் உட்காரவைத்து அவர்கள் இருவரது தலையிலும் உடற்பயிற்சி செய்யும் இரும்பு டம்பெல்களைக் கொண்டு அடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

மேலும், இவ்வாறு செய்தால் மொத்த குடும்பத்தாரின் ஆயுள் கூடும் என அவர்கள் நம்புவதாக கூறியுள்ளனர்.

விசாரணையின்போதும், தங்கள் பிள்ளைகள் மீண்டும் உயிரோடு வருவார்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்துள்ளனர்.

பட்டப்படிப்புகள் படித்திருந்தும், மூட நம்பிக்கையால் பெற்றோர்கள் சொந்த மகள்களையே நரபலி கொடுத்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்