மூன்றாம் வகுப்பு மாணவனை ஓரினச் சேர்க்கையில் துன்புறுத்திய கொடூரம்! 4 சிறுவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...

Report Print Ragavan Ragavan in இந்தியா
0Shares

தென்காசியில் 3-ஆம் வகுப்பு சிறுவனை இரண்டு மாதங்களாக 4 சிறுவர்கள் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாவட்டம் தென்காசியில், சங்கரன்கோயில் பகுதியில் வசிக்கும் மூன்றாம் வகுப்பு சிறுவனுக்கு திடீரென வாந்தி, ஆசனவாய் மற்றும் ஆணுறுப்பில் வீக்கம், வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுவனின் தாய் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது மருத்துவர் விசாரிக்கையில், சிலர் சிறுவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்துவது தெரியவந்தது.

கடந்த இரண்டு மாதங்களாக, சிறுவன் வசிக்கும் அதே பகுதியில் உள்ள வேறு 4 பள்ளி மாணவர்கள் தினமும் விளையாட அழைத்துச் சென்றுள்ளனர்.

நான்கு பெரும் போனில் ஆபாசப் படங்களை பார்த்துவிட்டு, இந்த 3-ஆம் வகுப்பு மாணவனை வற்புறுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக இது நடக்க, ஒவ்வொரு முறையும் அவனை கொன்றுவிடுவதாக அடித்து மிரட்டி பல வேலைகளை அந்த சிறுவர்கள் செய்துள்ளனர்.

பயந்துபோன சிறுவன் யாரிடமும் இதனை சொல்லாமல் துன்பத்தில் அவதிப்பட்டு வந்துள்ளான். அவனுக்கு காய்ச்சல், வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படவே அவனது தாய் கவனித்து நடத்தவற்றை விசாரித்து அறிந்துள்ளார்.

அவர் மருத்துவமனையிலிருந்து உடனடியாக தனது மகனை கூட்டிக்கொண்டு சங்கரன்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் 4 சிறுவர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த 4 சிறுவர்களும் 17 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரையும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆபாசப் படங்களை பார்த்துவிட்டு 4 மாணவர்கள் சேர்ந்து மூன்றாம் வகுப்பு மாணவனை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்