சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்! உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Santhan in இந்தியா
0Shares

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அவர் நாளை மறுநாள் சசிகலா விடுதலையாகிறார் என்ற தகவலை தினகரன் உறுதி செய்துள்ளார்.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, வரும் 27-ஆம் திகதி நான்கு ஆண்டு கால தண்டனைக்கு பின் விடுதலையாகவிருக்கிறார்.

ஆனால், அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அங்கிருக்கும் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால், அவரது விடுதலை தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டிடிவி தினகரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்