தமிழர்கள் 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! யார் யாருக்கு தெரியுமா? வெளியான முழு பட்டியல்

Report Print Santhan in இந்தியா
0Shares

இந்தியாவில் பத்மஸ்ரீ விருதுகள் பெறுவோருக்கான பட்டியல் இன்று வெளியாகியுள்ள நிலையில், இதில் 10 தமிழர்களுக்கு பத்ம ஸ்ரீ விருந்து வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது.

இந்தியாவில் கலை, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும், 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 10 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விருதுகளை மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் வழங்குவார்.இதில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் இடம் பிடித்துள்ளனர்.

பத்மஸ்ரீ விருது பெறும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்

  • P.அனிதா- விளையாட்டுத் துறை
  • ஸ்ரீ சுப்பு ஆறுமுகம்- கலைத்துறை
  • சாலமன் பாப்பையா- தமிழறிஞர்
  • பாப்பம்மாள்- விவசாயம்
  • பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்- கலைத்துறை
  • கே.சி சிவசங்கர்- கலைத்துறை
  • மராச்சி சுப்புராமன்- சமூக சேவை
  • சுப்பிரமணியன்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை
  • திருவேங்கடம் வீரராகவன்- மருத்துவம்
  • ஸ்ரீதர் வேம்பு- வர்த்தகம் மற்றும் தொழில்துறை

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்