தற்கொலை செய்து கொண்ட 34 வயதான இலங்கை தமிழ்ப்பெண்! காரணம் என்ன? தாயை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்

Report Print Raju Raju in இந்தியா
0Shares

தமிழகத்தில் குடும்ப தகராறு காரணமாக இலங்கை தமிழ்ப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள தென்பள்ளிப்பட்டு இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் கனகராஜ், அவரது மனைவி மேரி (34). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த மேரி வீட்டில் தூக்கில் தொங்கினார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மேரி பரிதாபமாக உயிழந்தார். இதன் காரணமாக மூன்று பிள்ளைகளும் தாயை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்