டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு: போலீசார் குவிப்பு.. இணைய சேவை முடக்கம்

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares

டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்படுகிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்த டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

72வது குடியரசு தினமான இன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

இதன்படி திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே விவசாயிகள் பேரணியை தொடங்கினர், அத்துடன் அனுமதிக்கப்பட்ட வழிகளை தவிர்த்து விவசாயிகள் நுழைய முயன்றதால் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தை கலைக்க போலீசார் முயன்றனர்.

இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் இல்லம், நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் சிங்கு, காசிப்பூர், டிக்ரி, முகர்பா சவுக், நங்க்லோய் ஆகிய இடங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளன, டெல்லியில் முக்கிய சாலைகள் மூடப்பட்டுளள்து.

இந்நிலையில் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்