நடக்கப்போவது என்ன? பொறுத்திருந்து பாருங்கள்- சசிகலா பரபரப்பு பேட்டி

Report Print Irumporai in இந்தியா
0Shares

நான்கு ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து தமிழகம் வந்துள்ள சசிகலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அதிமுக தலைமையகம் செல்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பொறுத்திருந்து பாருங்கள் என சசிகலா பதில் கூறினார்.

மேலும் நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என கூறிய சசிகலா, கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது.

அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது. புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம் என தெரிவித்தார்.

அத்துடன், அன்புக்கு நான் அடிமை.. கொண்ட கொள்கைக்கு நான் அடிமை என எம்.ஜி.ஆர் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி பேசியதுடன், ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது மக்களுக்குத் தெரியும் என கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்