17 இந்திய மாநிலங்களில் கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகவில்லை! சுகாதார அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்கள்

Report Print Ragavan Ragavan in இந்தியா
0Shares

இந்தியாவில் 17 மாநிலங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்றும் மற்ற மாநிலங்களில் மிக சொற்பமான பலி எண்ணிக்கைகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் தெலுங்கானா, ஒடிசா, ஜார்க்கண்ட், புதுச்சேரி, சண்டிகர், நாகாலாந்து, அசாம், மணிப்பூர், சிக்கிம், மேகாலயா, லடாக், மிசோரம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், திரிபுரா, லட்சத்தீவு, அருணாச்சல பிரதேசம் மற்றும் தாமன் மற்றும் டியு மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் புதிய கொரோனா இறப்புகள் எதுவும் அறிவிக்கவில்லை என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மற்ற 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 1 முதல் 5 புதிய கொரோனா இறப்புகளை மட்டுமே பதிவு செய்துள்ளன.

இதற்கிடையில், கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட 28 நாட்களில் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில் சுமார் 6 மில்லயன் பேர் சுகாதார பணியாளர்கள் மற்றும் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் முன்னணி ஊழியர்கள் ஆவர்.

அதேபோல், முதல் நாளில் முதல் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இன்று இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்