நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை வைத்து மூளை சலவை செய்யும் அளவுக்கு விளம்பரம்! ஏமாந்து நடு ரோட்டில் வந்து நிற்கும் மக்கள்

Report Print Santhan in இந்தியா
0Shares

தமிழகத்தில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை காண்பிடித்து ரூபாய் 40 கோடி ரூபாய் வரை சுருட்டி எஸ்கேப் KFJ நிறுவனத்தினரை பொலிசார் பிடிக்காமல் அலட்சியம் காட்டுவதால், பணத்தை பறிகொடுத்தவர்கள் பொலிசாரை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மயிலாப்பூர், அண்ணா நகர், புரசைவாக்கம், வளசரவாக்கம் ஆகிய இடங்களில் KFJ என்ற பெயரில் நகைக்கடைகள் இயங்கி வந்துள்ளது.

இந்த நகைக்கடையின் மேலாண் இயக்குநராக சுஜித் செரியனும், இயக்குநர்களாக அவரது மனைவி தான்யாவும், சகோதரர் சுனில் செரியன் ஆகியோர் இருந்தனர்.

பணச்சீட்டு நடத்துவதுபோல, இந்நிறுவனம் பல்வேறு பெயர்களில் தங்க நகைசேமிப்பு திட்டங்களை அறிவித்தது.

அதன்மூலம், பொதுமக்களிடம் இருந்து பழைய தங்க நகைகளையும், பணத்தையும் வாங்கிக் கொண்டு, நகைச்சீட்டு முடிவு திகதி முடிந்த பின்னரும் வாடிக்கையாளர்களுக்கு பணமோ, தங்கமாகவோ கொடுக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் அப்படி கொடுக்கவில்லை, குறித்த நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட காசோலைகளும் பணமில்லாமல் திரும்பி வந்து விட்டன.

இதையடுத்து, சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் KFJ ஜுவல்லரி மீது புகார்கள் கொடுக்கப்பட்டன. இந்த புகார்கள் அனைத்தும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டன.

சுமார் 2 ஆயிரம் பேர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி 40 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தது.

பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி கே.எப்.ஜே ஜுவல்லரி நிர்வாகிகள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓர் ஆண்டு கடந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் நேற்று கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது தொழிலில்திடீரென நஷ்டம் ஏற்பட்டு விட்டது. சொத்துகளை விற்று எங்கள்பணத்தை திருப்பிக் கொடுப்பதாக கே.எப்.ஜே நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனால், எங்களை ஏமாற்றும் நோக்கத்திலேயேதான் பணம் மற்றும் தங்கத்தை எங்களிடம் இருந்து வாங்கியுள்ளனர். கே.எப்.ஜே நிறுவன நிர்வாகிகள் சென்னையில் பல இடங்களில் சொத்துகளை வாங்கி வைத்துள்ளனர். அவற்றை முடக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், இந்த நிறுவனத்திற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் விளம்ரத்தில் நடித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் நடிகையின் பேச்சை நம்பி நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம் என்று கூறியுள்ளனர்.

லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர், அப்படி நியாயமாக பேசுகிறார், இதனால் அவரின் விளம்பர பேச்சை நம்பி சிலர் ஏமாந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்