8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த மற்றோரு சிறுவன்; கிராம பஞ்சாயத்து வழங்கிய விசித்திர தீர்ப்பு!

Report Print Ragavan Ragavan in இந்தியா
0Shares

வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 16 வயது சிறுவனுக்கு கிராம பஞ்சாயத்தில் விசித்திரமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் பிஜ்னோர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 16 வயது மிக்க சிறுவன் தனது பக்கத்து வீட்டில் உள்ள 8 வயது உறவுக்கார சிறுவனை, அருகில் உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று வற்புறுத்தி தவறான உடலுறவில் ஈடுபட்டுள்ளான்.

அப்போது சிறுவனின் கதறல் சத்தம் கேட்டு, அவ்வழியே சென்றுகொண்டிருந்த கிராம மக்கள் சிறுவனை மீட்டுள்ளனர்.

பின்னர், வலியில் துடித்து அழுதுகொண்டிருந்த பாதிக்கப்பட்ட சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

உறவுக்காரர்கள் என்பதால், சிறுவனின் பெற்றோர் பொலிஸில் புகார் அளிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கிராம மக்கள் இதை அப்படியே விடவில்லை. கடந்த செவ்வாய்கிழமை வழக்கை பஞ்சாயத்தில் வைத்து தீர்க முடிவு செய்தனர்.

பின்னர் இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினரையும் அழைத்து விசாரித்த பஞ்சாயத்து குழுவினர் வேடிக்கையான தண்டனையை தீர்ப்பாக வழங்கியுள்ளனர்.

குற்றம் செய்த சிறுவனுக்கு கன்னத்தில் 4 அறையும், ரூ. 1 லட்சம் அபராதமும் கட்டுமாறு பஞ்சாயத்து நாட்டாமைகள் தீர்ப்பளித்துள்ளனர். இப்போது இந்த தீர்ப்பு வேடிக்கையான பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்