58 ஆண்டுகளில் முதல் முறையாக நாகாலாந்து சட்டமன்றக் கூட்டத்தொடரில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு இந்திய மாநிலமான நாகாலாந்தில் கடந்த பிப்ரவரி 12-ஆம் திகதி 13-வது சட்டமன்றக் கூட்டத்தின் 7-வது அமர்வில் நாகாலாந்து ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.
1963 டிசம்பர் 1-ஆம் திகதி நாகாலாந்து 16-வது தனி மாநில அந்தஸ்த்தைப் பெற்றதிலிருந்து முதல் முறையாக தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு அறிய நிகழ்வாக காணப்படுகிறது. இதனை பாதுகாப்பு ஆய்வாளர் நிதின் ஏ கோகலே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Pl see the video below. At first glance, perfectly normal scene, right? But you will be amazed, like I was, to know that this was for the first time that the National Anthem was played in the Nagaland Assembly. Just for the record, Nagaland became a State on 1 December 1963 pic.twitter.com/70s6Q20d1N
— Nitin A. Gokhale (@nitingokhale) February 19, 2021
இதேபோல், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரிபுரா மாநிலத்தின் சட்டப்பேரவையில் முதல் முறையாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.