கத்தியால் குத்தி... 3 முறை காரை ஏற்றி மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்! தீராத கோபத்தால் நடந்த சம்பவம்

Report Print Santhan in இந்தியா
0Shares

தமிழகத்தில் மனைவியை கத்தியால் குத்திய பின்பும், கோபம் தீராத காரணத்தினால் அவர் மீது மூன்று முறை காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவ கோகுல்குமார்(30). இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த ஹரி என்பவரின் மகள் 26 வயதான கீர்த்தனாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

கோகுல்குமார் சென்னைப் புறநகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கீர்த்தனா, தனியார் மருத்துவமனையில் மனிதவள மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த ஓராண்டாக கீர்த்தனா தனது பெற்றோருடன் மதுராந்தகத்தில் வசித்து வந்துள்ளார். கோகுல்குமார், மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கத்தில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக் கிழமை பிற்கபல் 2 மணிக்கு மாமனார் வீட்டிற்கு கோகுல்குமார் சென்றுள்ளார்.

அப்போது அங்கு கீர்த்தனாவுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட, கோபத்தின் உச்சிக்கு சென்ற தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மனைவி கீர்த்தனாவின் கழுத்திலும் இடது மார்பிலும் சரமாரியாக குத்தினார்.

அதைத் தடுக்க வந்த மாமனார் ஹரியையும் குத்த, கீர்த்தனா அங்கிருந்து தப்பிக்க வீட்டில் இருந்து வெளியே ஓடியுள்ளார்.

அப்போது ஆத்திரம் தீராத கோகுல்குமார், வீட்டில் இருந்த காரை வெளியே எடுத்து வந்த கோகுல்குமார் கீர்த்தனா மீது 3 முறை விடாமல் ஏற்றி இறக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் கீர்த்தனாவின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆரம்பகட்ட விசாரணையில், கீர்த்தனாவின் உடலில் 20-க்கும் மேற்பட்ட கத்திக்குத்துக் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், கோகுல்குமார் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

மனைவியைக் கொலை செய்த பதற்றத்தில் காரை இயக்கிய கோகுல்குமார், அச்சரப்பாக்கம் அருகே, இருசக்கர வாகன ஓட்டி மீது காரை மோதியுள்ளார்.

அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த பொலிசார் கோகுல்குமாரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்