திருமணமானதை மறைத்து தன்னை விட வயது குறைவான இளைஞனை காதலித்த இளம்பெண்! காதலி வீட்டிலேயே உயிரைவிட்ட பரிதாபம்

Report Print Raju Raju in இந்தியா
0Shares

தமிழகத்தில் திருமணமானதை மறைத்து இளைஞரை பெண் காதலித்த நிலையில் உண்மையை அறிந்த இளைஞர் அப்பெண் வீட்டிலேயே உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருபவர் அம்ரின் (25). இவரது கணவர் அஜீஸ் . இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் yoyo என்ற சமூக வலைதளத்தின் மூலம் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்த பூபதி (21) என்பவருடன் அம்ரின் பழகி வந்துள்ளார்.

திருமணம் ஆகாத பூபதியிடத்தில் அம்ரின் காதல் வார்த்தை பேசி வந்துள்ளதாக தெரிகிறது. பூபதியிடம் தன்னை கல்லூரி மாணவி என்றும் தனக்கு திருமணம் நடைபெறவில்லை என்றும் கடந்த 7 மாதங்களாக yoyo செயலி மூலம் அம்ரின் ஆசை வார்த்தைகள் பேசி வந்துள்ளார்.

இதையடுத்து , அம்ரீனை பார்க்க அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு தெரியாமல் அவரை திருமணம் செய்து கொள்ள தாலியும் வாங்கி சென்றுள்ளார். அப்போது, அம்ரீன் வீட்டில் இல்லை. அவரின் குழந்தைகள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளன.

குழந்தைகளிடத்தில் நீங்கள் யார் என்று பூபதி கேட்டுள்ளார். அப்போது, அம்ரினுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது கணவருடன் வசிப்பதும் பூபதிக்கு தெரிய வந்துள்ளது.

இதனால், பூபதி மிகுந்த மன வேதனையடைந்துள்ளார். மன உளைச்சலுக்குள்ளாகன அவர் அம்ரின் வீட்டில்லேயே உள்ள மின்விசிறியின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்றிருந்த அம்ரின் வீட்டுக்கு வந்த போது, பூபதி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து பொலிஸ் புகார் அளித்துள்ளார்.

பின்னர், சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்