போதை மருந்து அளித்து இயற்கைக்கு மாறான உறவு... மருத்துவர் மனைவி தற்கொலை: சிக்கிய 18 பக்க கடிதம்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் போதைப்பொருள் கொடுத்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவு வைத்து கொண்டதால் மருத்துவர் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் காட்லோடியா பகுதியை சேர்ந்த 47 வயதான மருத்துவர் ஹிதேந்திர படேல், இவரது மனைவி ஹர்ஷா (42).

இவர்கள் கடந்த 2020 ஆகஸ்டில் திருமண தகவல் மையம் மூலம் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், கடந்த 9 ம் திகதி ஹிதேந்திராவின் வீட்டிற்கு வெளியே அவரது மனைவி ஹர்ஷா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் ஹர்ஷாவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பியதுடன்,

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்து விசாரணையும் முன்னெடுத்து வந்தனர். வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக, ஹிதேந்திராவின் வீட்டை சோதனை நடத்திய பொலிசார்,

ஹர்ஷாவின் அறையில் அவர் கைப்பட எழுதியிருந்த 18 பக்க தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் ஹர்ஷா, எனது கணவர் ஹிதேந்திரா வெறும் பாலியல் உறவுக்காக மட்டுமே தன்னை திருமணம் செய்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் ஒரு மருத்துவர் என்பதால், அவ்வப்போது எனக்கு போதைப் பொருட்களைக் கொடுத்து, மயக்க நிலையில், கட்டாயப்படுத்தி இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொள்வார்.

எனது மாமியாரும், எனது கணவரும் திருமணமான சிலநாட்களிலேயே என்னை துன்புறுத்தத் தொடங்கினர். எனது குடும்பத்தினரிடம் வரதட்சணை கேட்டு வாங்கி வர கட்டாயப்படுத்தினர்.

அவர்களது விருப்பங்களை நிறைவேற்றாததால் என்னை அவமதித்தனர். என் கணவரின் பெற்றோர் என்னை தவறாக நடத்தியது மட்டுமின்றி, அடித்து உதைத்து துன்புறுத்தினர் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து மருத்துவர் ஹிதேந்திரா, அவரது தந்தை மனு படேல் (71) மற்றும் தாய் சுபத்ரா படேல் (69) ஆகியோரை தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து, பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக மருத்துவர் ஹிதேந்திராவை அவரது மருத்துவமனையில் சென்று சந்தித்த பின்னரே ஹர்ஷா இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்