மகிழ்ச்சி பொங்க வீடியோ பதிவு... அடுத்த நொடி ஆற்றில் குதித்த இளம்பெண்: அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சபர்மதி ஆற்றின் அருகே சிரித்தபடி வீடியோ பதிவு செய்துவிட்டு, அடுத்த நொடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் தொடர்பில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆயிஷா மக்ரானி(24) என தம்மை அறிமுகம் செய்து கொண்டு, அந்த காணொளியில் பேசிய அவர்,

தாம் அடுத்த சில நிமிடங்களில் செய்யவிருக்கும் செயலுக்கு தாமே பொறுப்பு எனவும், இதில் யாருக்கும் தொடர்பு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடவுள் கொஞ்ச காலமே உயிர் வாழ தம்மை அனுமதித்திருக்கிறார். கணவர் ஆரிஃபுக்கு சுதந்திரம் வேண்டும், இதன்மூலம் அதை அவருக்கு வழங்குகிறேன்.

உங்கள் மீது எவரேனும் பாசம் வைக்க வேண்டும் என்றால் நீங்களும் பாசம் காட்டுங்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்.

ஒருபக்க அன்பால் எந்த பலனும் இல்லை. உங்களில் வேண்டுதல்களில் என்னையும் நினைவில் கொள்ளுங்கள். அல்லாவிடம் செல்கிறேன் என கடைசியாக கூறிவிட்டு, ஆயிஷா மக்ரானி சபர்மதி ஆற்றில் குதித்துள்ளார்.

ஆயிஷா மக்ரானி மற்றும் ஆரிஃப் கான் தம்பதி 2018ல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் மிக குறைந்த நாட்களுக்கு மட்டுமே திருமணமான மகிழ்ச்சி ஆயிஷா மக்ரானியிடம் காண முடிந்துள்ளது.

கணவர் ஆரிஃபும் குடும்பத்தினரும் வரதட்சிணை தொடர்பில் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

இந்த தகவல் ஆயிஷாவின் தந்தைக்கு தெரிய வரவே, அவர் 1.5லட்சம் ரூபாய் பணத்தை ஆரிஃபுக்கு வழங்கியதுடன், ஆயிஷாவை மீண்டும் கணவர் வீட்டுகே அனுப்பி வைத்துள்ளார்.

இருப்பினும் பிரச்சனைகள் ஓயாமல், ஆயிஷா மீண்டும் பிறந்த வீட்டுக்கே திரும்பியுள்ளார்.

இந்த நிலையிலேயே, சபர்மதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முன்னர், காணொளி ஒன்றை பதிவு செய்து அதை கணவர் ஆரிஃப் கானுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்