17 வயது மகளின் தலையை துண்டாக வெட்டி கையில் எடுத்து வந்த தந்தை! பொலிசாரிடம் சொன்ன காரணம்

Report Print Santhan in இந்தியா
0Shares

இந்தியாவில் 17 வயது மகளின் தலையை தந்தை தனியாக வெட்டி எடுத்து காவல்நிலையத்திற்கு கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில், சதீஷ்குமார் என்பவர் தன் மகள், வேறொரு நபருடன் பழகி வந்ததால், ஆத்திரத்தில், மகளின் தலையை தனியாக வெட்டி எடுத்துள்ளார்.

அதன் பின் அந்த தலையோடு அவர் காவல்நிலையம் நோக்கி நடந்து வந்ததால், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் அவரை இடையிலே வழிமறித்து கைது செய்தனர்.

இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கூர்மையான ஆயுதத்தால் மகளின் கழுத்தை அறுத்ததாகவும், அதன் பின் தலையை தனியாக எடுத்து காவல் நிலையம் நோக்கி வந்ததாகவும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து அவரின் வீட்டிற்கு பொலிசார் சென்ற போது, அங்கு தலையில்லாமல் அந்த பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் மகளின் தலையை கைப்பற்றும்போது முறையாக செயல்படாத காவல்துறை அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் உத்தரப் பிரதேசத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்