தமிழக சட்டபேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! முதல் ஆளாக வந்து ஓட்டு போட்ட நடிகர் அஜித்குமார் மற்றும் ரஜினிகாந்த்.. வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
0Shares

தமிழக சட்டசபை தேர்தலுக்கான் வாக்குப்பதிவு சற்று முன்னர் தொடங்கிய நிலையில் நடிகர் அஜித்குமார், ரஜினிகாந்த் ஆகியோர் வந்து வாக்கு செலுத்தினார்கள்.

அதன்படி சென்னை திருவான்மயூரில் உள்ள வாக்குசாவடிக்கு தனது மனைவி ஷாலினியுடன் வந்த நடிகர் அஜித்குமார் தனது வாக்கை செலுத்தினார்.

பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

அதே போல ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்கு செலுத்தினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்‌ஷராஹாசனுடன் வந்து வாக்கு செலுத்தினார்.

 • April 06, 2021
 • 10:18 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

 • April 06, 2021
 • 10:13 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

செஞ்சி அருகே நல்லான் பிள்ளைபெற்றாள் கிராம வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு அருகே வந்த இருசக்கர வாகன கண்ணாடியை போலீசார் உடைத்தாக கூறி, பொதுமக்கள் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

 • April 06, 2021
 • 10:12 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

மதுரையில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா வாக்களித்தார். வாக்களித்த அவர், தேர்தல் துவங்கப்பட்ட காலம் முதல் தற்போது வரை இடைவிடாது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறேன். இந்திய குடிமகன் என்பதை பெருமையாக கருதுகிறேன் என்று பாப்பையா பேட்டியளித்துள்ளார்.

 • April 06, 2021
 • 09:27 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

 • April 06, 2021
 • 06:38 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

அமைச்சர் செல்லூர் ராஜு வாக்குச்சாவடியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • April 06, 2021
 • 06:20 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வாக்களிக்க சென்ற போது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

 • April 06, 2021
 • 05:39 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

அவிநாசி வாக்குச்சாவடியில் சூரியனுக்கு அழுத்தினால் இரட்டை இலைக்கு ஓட்டு விழுவதாகப் புகார் எழுந்துள்ளது.

 • April 06, 2021
 • 04:18 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

வேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.கே அப்பு இன்று காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

 • April 06, 2021
 • 04:16 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

 • April 06, 2021
 • 03:58 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கத்தில் உள்ள வேளாங்கன்னி மெட்ரிகுலேசன் பள்ளியில் வாக்களித்தார்

 • April 06, 2021
 • 03:57 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

மதுரவாயல் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கம் வேலன் நகரில் உள்ள குட் செப்பர்டு மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

 • April 06, 2021
 • 03:49 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

நாகர்கோவில் அரசு எஸ்.எல் பி.பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார் பொன்ராதகிருஷ்ணன். கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்களிக்க பொது மக்களிடையே பெரும் எழுச்சியை காணமுடிகிறது, இது தொடர்ந்தால் மாவட்டத்தில் 75 சதவீதம் வாக்குப்பதிவு வாய்ப்பு உள்ளது-

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலின் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

 • April 06, 2021
 • 03:08 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பழவிளை பகுதியில் உள்ள கிடங்கன்கரை விளை அரசு நடுநிலை பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

 • April 06, 2021
 • 03:07 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

 • April 06, 2021
 • 03:00 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

 • April 06, 2021
 • 02:59 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வாக்கு இயந்திரம் கோளாறால் வாக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு்ளளது. அநத வகையில், திருத்துறைப் பூண்டி அருகே வேலூர் கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வாக்களிக்க வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், வாக்கு இயந்திர கோளாறால் 15 நிமிடமாக காத்திருக்கிறார்!

 • April 06, 2021
 • 02:58 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.ஈ.டி கல்லூரில் தனது வாக்கை பதிவு செய்தார்.

 • April 06, 2021
 • 02:58 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

சென்னை அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வாக்களித்தார்

 • April 06, 2021
 • 02:39 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண் 1 A ல் வாக்குப்பதிவு எந்திரம் பழுது.

பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

 • April 06, 2021
 • 02:35 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

காட்பாடி அடுத்த லத்தேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ நந்தகுமார் வாக்களித்தார்.

 • April 06, 2021
 • 02:30 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல வாக்குச்சாவடிகளில் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை.

 • April 06, 2021
 • 02:29 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்.

 • April 06, 2021
 • 02:19 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெறும் என, காரைக்குடியில் வாக்களித்த பின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 • April 06, 2021
 • 02:19 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ எல் எஸ் லட்சுமணன் பாளையங்கோட்டையில் உள்ள உன் நினைவு நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

 • April 06, 2021
 • 02:15 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டு பதிவானது சரியாக 7 மணிக்கு துவங்கியது. கீதா மேல்நிலைப்பள்ளியில் திமுக வேட்பாளர் கீதாஜீவன் தனது வாக்கை குடும்பத்தினருடன் வருகை தந்து வரிசையில் நின்று பதிவு செய்தார்.

 • April 06, 2021
 • 02:15 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

சென்னை விருகம்பாக்கத்தில் தனது வாக்கினை செலுத்தினார் தமிழிசை சௌந்தரராஜன்

 • April 06, 2021
 • 02:14 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

திண்டிவனத்தில் தனது வாக்கினை செலுத்தினார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

 • April 06, 2021
 • 02:03 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

திருவான்மியூர் வாக்குசாவடியில் மனைவி ஷாலினியுடன் முதல் ஆளாக வந்து தன்னுடைய வாக்கினை செலுத்தினார் நடிகர் அஜித்குமார்.

 • April 06, 2021
 • 02:02 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியது, காலை 7 மணிமுதல் இரவு 7 மணிதொடர்ந்து தொடர்ந்து 12 மணிநேரம் வாக்குபதிவு நடக்கவுள்ளது.

Load More

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்