இதனால் தான் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்துள்ளார்! பாஜக குஷ்பு சொன்ன காரணம்

Report Print Basu in இந்தியா
0Shares

நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்ததின் காரணத்தை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.

நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் பள்ளியில் வாக்களித்தார். வாக்களிக்க அவர் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து சைக்கிளில் வந்தது பேசும் பொருளாக மாறியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விஜய் சைக்கிளில் வந்ததாக கூறப்படுகிறது.

சைக்கிளில் வந்ததின் மூலம் விஜய் தனது அரசியில் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக பலர் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளர் குஷ்பு, நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்ததை சிலர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர்.

வாக்குச்சாவடி மையம் வீட்டின் அருகே இருப்பதால் விஜய் சைக்கிளில் வந்துள்ளார் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்