நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததற்கான காரணத்தை அவரது பிஆர்ஓ ரியாஸ் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது தேர்தல் நாளான இன்று பேசும் பொருளாக அமைந்துள்ளது.
குறிப்பாக விஜய் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விஜய் சைக்கிளில் வந்ததாக கருத்துக்கள் பரவுகிறது.
அதேசமயம், வாக்குச்சாவடி மையம் வீட்டின் அருகே இருப்பதால் விஜய் சைக்கிளில் வந்துள்ளார் என குஷ்பு தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, நடிகர் விஜயின் பிஆர்ஓ ரியாஸ் வெளியிட்டுள்ளார்.
விஜய் வீட்டுக்கு அருகே வாக்குச்சாவடி இருந்ததால் அவர் சைக்கிளில் வந்ததாகவும், சின்ன சந்து என்பதால் காரை நிறுத்த முடியாது என்பது மட்டுமே என ரியாஸ் கூறியுள்ளார்.