வெளிநாட்டில் இருந்து ஓட்டு போட தமிழகம் வந்த இளைஞர்! அவர் வாக்கு ஏற்கனவே பதிவானதால் அதிர்ச்சி.. பின்னர் மேற்கொண்ட சாதுர்ய செயல்

Report Print Raju Raju in இந்தியா
0Shares

வெளிநாட்டில் இருந்து ஓட்டு போடுவதற்காக தமிழகம் வந்த இளைஞரின் வாக்கை வேறு யாரோ செலுத்திய நிலையில் 49 P சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு செலுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது

இந்நிலையில் திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார்கோட்டை வாக்குச்சாவடியில் தனது வாக்கு ஏற்கனவே பதிவானது கண்டு ரமேஷ்குமார் என்ற இளைஞர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் தனது ஆவணங்களை காண்பித்து, தேர்தல் நடத்தை விதியின் '49 P' சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கை வாக்குச்சீட்டு மூலமாக செலுத்தினார்.

அபுதாபியில் பொறியாளராக உள்ள ரமேஷ்குமார், வாக்களிப்பதற்காக திருச்சி வந்துள்ளார் என்பதும் இவரது பெயரில் போலியான ஆதார் அட்டையைக் காட்டி வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்