நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகிய இருவருக்கும் செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சரத்குமார் தமிழ் திரையுலகில் நடிகராகவும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார்.
இவர் மனைவி ராதிகாவும் நடிகையாவார்.
இந்த நிலையில் சரத்குமார், ராதிகா பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் செக் திரும்பியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் 7 செக் மோசடி வழக்குகளில் சரத்குமார் மீதான 5 வழக்குகளில் ஓராண்டு சிறை விதித்து தீர்ப்பு.
ராதிகாவுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.