மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இலங்கை தமிழர் தீக்குளித்து தற்கொலை! நடந்தது என்ன? சோக சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா
0Shares

தமிழகத்தில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் முகாமில் வசித்து வந்தவர் கிளிநொச்சியை சேர்ந்த தேவராஜ் (38). இவருக்கு மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் தேவராஜ், தனது மனைவியை கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2-ந் திகதி இரவு தேவராஜ் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தேவராஜ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்