தமிழகத்தில் ஏப்ரல் 10ம் திகதி முதல் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமுல்! அரசு முக்கிய அறிவிப்பு

Report Print Basu in இந்தியா
0Shares

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,986 ஆக அதிகரித்துள்ளது, 17 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னை- 1,459, கோவை- 332, செங்கல்பட்டு - 390, திருவள்ளூர்- 208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை மீண்டும் 10,685 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது, 10.4.2021 முதல் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை, கோயம்பேடு சில்லரை வணிக அங்காடி மூடப்படும், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி.

ஷாப்பிங் மால், கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்திலும் 50% மட்டுமே அனுமதி, பேருந்துகளில் இருக்கை எண்ணிக்கையில் மட்டுமே பயணிகள் அனுமதி

வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை வழிபட அனுமதி. ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பேரும் டாக்ஸி ஓட்டுநர் தவித்த மூன்று பேர் மட்டுமே செல்ல அனுமதி.

விளையாட்டு மைதானங்கள், அரங்கங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமலும், இறுதிச் சடங்கில் 50 பேருக்கு மிகாமலும் கலந்து கொள்ள வேண்டும்.

உணவகம் மற்றும் தேநீர் கடைகளில் மொத்த இருக்கைகளில் 50% மட்டும் அனுமதி என தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்