நள்ளிரவில் மாடியிலிருந்து இறங்கிய 15 வயது சிறுமிக்கு நேரந்த கொடூரம்; மறுநாள் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Ragavan Ragavan in இந்தியா
0Shares

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மீரட் மாவட்டத்தில் டிரான்ஸ்போர்ட் நகர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள மல்யானா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி மறுநாள் காலையில் ஒரு வயலில் இருந்து மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.

பின்னர் அவர் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி அடையாளம் காட்டியபடி Bunty எனும் இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் குடும்பத்தினரின் புகாரளித்ததன்படி, அவர்கள் வீட்டில் கட்டுமான பணி நடப்பதால் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். சிறுமி தண்ணீர் குடிக்க கீழே இறங்கியபோது, ​​அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அவரை மயக்க மருந்து அடித்து கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள வயலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். காலையில் சிறுமியை வீட்டில் காணாதபோது பதறிப்போன குடும்பத்தினர் அவரை தேட ஆரம்பித்தனர்.

சிறுமி பின்னர் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலத்தில் மயக்க நிலையில் காணப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரது மருத்துவ பரிசோதனையில் அவர் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட Bunty, சில காலமாக தன்னை துன்புறுத்தியதாக சிறுமி குற்றம் சாட்டியுள்ளார். தன்னை வழியில் பல முறை தடுத்து அவனுடன் நட்பு கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளான். அதற்கு மறுத்தபோது, ​தன்னை மோசமான விளைவுகளால் அச்சுறுத்தியதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்