அந்தமானில் நிலநடுக்கம் 5.2 ரிக்டராக பதிவு

Report Print Tamilini in இந்தியா

அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

மேலும், இந்த அதிர்வு அங்குள்ள வீடுகளில் உணரபட்டதாகவும், இதனால் மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை ஒட்டிய மண்டலத்தில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 8.6 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 92.4 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை திசையில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோளில் 5.2 ஆக பதிவானது. இந்த நிலஅதிர்வு அங்குள்ள வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள பிற தீவுகளிலும் உணரப்பட்டது.

இதனால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு வெளியே வந்தனர். இருப்பினும் பாதிப்புகள் பற்றி எதுவும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers