புதிய வசதிகளுடன் அறிமுகமாகும் கூகுள் பிளே மியூசிக்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

ஒன்லைனில் பல்வேறு பாடல்களை கேட்டும் மகிழும் வசதியினை கூகுள் பிளே மியூசிக் சேவை வழங்கிவருகின்றது.

தற்போது இச் சேவையில் புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மேம்படுத்தப்பட்டும் உள்ளது.

இதன்படி இச் சேவையினைப் பயன்படுத்தும் நபர் வசிக்கும் இடத்திற்கு ஏற்ப பாடல்களை கேட்டு மகிழக்கூடியதாக இருக்கும்.

அது மட்டுமல்லாமல் காலநிலைகளுக்கு ஏற்பவும் பாடல்களை கேட்டு மகிழக்கூடியதாக இருக்கும்.

இவ் வசதியானது கூகுள் பிளே சேவையைப் பயன்படுத்தும் சாதனம் பயன்படத்தப்படும் இடத்தைக் கணிப்பதன் ஊடாக வழங்கப்படும்.

தவிர இச் சேவையானது 62 நாடுகளில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் புதிய வசதிகளை இணையத்தின் ஊடாகவும், Android, iOS அப்பிளிக்கேஷன் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments