விசேட அம்சங்களைக் கொண்ட Firefox உலாவியின் புதிய பதிப்பினை வெளியிட்டது Mozilla!

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

இணைய உலாவிகளின் வரிசையில் கூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்ததாக காணப்படுவது Mozilla நிறுவனத்தின் Firefox ஆகும்.

இந்த உலாவியின் 54 வது பதிப்பினை தற்போது Mozilla நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பயனர்களின் இரு முக்கியமான எதிர்பார்ப்பினை நிறைவேற்றக்கூடிய வகையில் இந்த புதிய பதிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது முன்னைய பதிப்புக்களை விட வேகமாக செயற்படக்கூடிய வகையிலும், குறைந்தளவு பிரதான நினைவகத்தினை பயன்படுத்தக்கூடிய வகையியும் காணப்படுகின்றது.

இதன் வேகமானது ஏனைய இணைய உலாவிகளினை விடவும் வேகமாக இருப்பது விசேட அம்சமாகும்.

மேலும் இப் பதிப்பினை டெக்ஸ்டாப் கணனிகள், அப்பிளின் மேக் கணனிகள், லினக்ஸ் இயங்குதளங்களைக் கொண்ட கணனிகள் மற்றும் மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்த முடியும்.

இணையதள முகவரி

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments