டுவிட்டரில் சாதனை படைத்த ஜிஎஸ்டி

Report Print Nithya Nithya in இன்ரர்நெட்

ஜூலை 1ம் திகதி இந்தியா முழுவதும் அறிமுகமான ஜிஎஸ்டி வரியானது அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தின் விலைவாசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

தற்போது ஜிஎஸ்டி பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் புதிய சாதனையை படைத்துள்ளது.

ஜூன் 30ம் திகதி முதல் ஜூலை 2ம் திகதி வரை ஜிஎஸ்டி வரிமுறை சார்ந்து பத்து லட்சம் ட்வீட்கள் போடப்பட்டுள்ளன.

இதில் ஜூலை 1ம் திகதி அதிகாலை 1.30 மணிக்கு மட்டும் நிமிடத்திற்கு 1100 ட்வீட்கள் போடப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி வெளியீட்டை தொடர்ந்து பல்வேறு ட்வீட்கள் ஜி.எஸ்.டி சார்ந்து போடப்பட்டன.

இதில் #GSTCouncil, #GSTIndia, #GST@GoI, #GSTRate, GST, #GST, #GSTsimplified, #IndiaforGST, askGST, #GSTForCommonMan, #HalfCookedGST, #HalfBakedGST போன்ற ட்வீட்கள் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்டன.

டுவிட்டரில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்த போது மட்டும் பத்து லட்சம் ட்வீட்களை கடந்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டுவிட்டரில் ஜிஎஸ்டி சாதனை படைத்துள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments