Verizon Wireless நிறுவனத்துடன் இணையும் சாம்சுங்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
22Shares
22Shares
ibctamil.com

தற்போது பாவனையில் உள்ள 4G தொழில்நுட்பத்தினை விடவும் வேகம் கூடிய 5G தொழில்நுட்பத்தினை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

இத் தொழில்நுட்பம் ஆனது சாத்தியமாக்கப்பட்டுள்ள நிலையில் உத்தியோகபூர்வமான முறையில் பாவனைக்கு விடப்படவில்லை.

இந்நிலையில் சாம்சுங் நிறுவனம் ஒரு புதிய அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அதாவது கலிபோர்னியாவில் உள்ள Sacramento பிரதேசத்தில் 5G தொழில்நுட்ப சேவையினை வழங்குவதற்கு Verizon Wireless நிறுவனத்தின் குழு ஒன்றுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இம் முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் ஏனைய பிரதேசங்கள், நாடுகள் என இவ் வலையமைப்பு விஸ்தரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்