இனி நாள் முழுவதும் Facebookஇலேயே இருக்கவேண்டாம்: Mark Zuckerberg

Report Print Balamanuvelan in இன்ரர்நெட்
212Shares
212Shares
lankasrimarket.com

Facebookஇல் பல பெரிய மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக அதன் நிறுவனர் Mark Zuckerberg தெரிவித்துள்ளார்.

”நீங்கள் பார்க்கப்போகும் முதல் மாற்றம் செய்தி இடுகைகளில் செய்யப்பட உள்ளது. இனி உங்கள் நண்பர்களும் குடும்பமும் இடும் செய்திகளைத்தான் அதிகம் பார்க்க இருக்கிறீர்கள். இதனால் நீங்கள் ஆன்லைனில் செலவு செய்யும் நேரம் கணிசமாக குறையும்.

வியாபாரம், பிராண்டுகள் மற்றும் மீடியாக்கள் இடும் உள்ளடக்கம் இனி குறைவாகத்தான் இருக்கும். நீங்கள் பார்க்க உள்ள பொது உள்ளடக்கங்களும் அதே தரமுடையவையாகவும் மக்களிடையே அர்த்தமுள்ள உறவுகளை ஊக்குவிப்பதாகவுமே இருக்கும்.

தனிப்பட்ட விஷயங்களைவிட வியாபாரம், பிராண்டுகள் மற்றும் மீடியாக்கள் இடும் உள்ளடக்கங்கள் அதிகமாகி விட்டதாக எங்களுக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

தங்கள் தந்தை உருவாக்கியது, உலகத்திற்கு நன்மையையே செய்யக்கூடியது என்று தன் பிள்ளைகள் எண்ண வேண்டும் என்று அவர் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mark Zuckerbergக்கு Maxima மற்றும் August என்னும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்