இந்திய பிரபலங்களுக்கான இன்ஸ்டாகிராம் விருதுகள்: யார் யாருக்கு தெரியுமா?

Report Print Kabilan in இன்ரர்நெட்

இந்தியாவில் முதன் முறையாக அறிவிக்கப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் விருதுகள் பட்டியலில் விராட் கோஹ்லி, தீபிகா படுகோன் போன்ற பிரபலங்கள் இடம் பிடித்துள்ளனர்.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் முதன் முறையாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதள விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில், ரசிகர்களால் அதிகம் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் கணக்கு என்கிற விருது விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட்டுள்ளது. கோஹ்லியின் இன்ஸ்டாகிராம் கணக்கை, 1,98,00,000 பேர் பின் தொடர்கின்றனர்.

இது மற்ற கணக்குகளைக் காட்டிலும் குறைவாக இருந்தாலும், Likes மற்றும் Comments ஆகியவற்றில் விராட் கோஹ்லி முன்னணியில் உள்ளதால் இந்த விருது வழங்கப்படுகிறது.

AFP

இதே போல, அதிகம் பேர் பின் தொடரும் இன்ஸ்டாகிராம் விருது பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரை 2,24,00,000 பேர் பின் தொடர்கின்றனர்.

மேலும் பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், ஷ்ரத்தா கபூர் போன்ற நடிகைகளுக்கும் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வளர்ந்து வரும் பிரபலமாக அடையாளம் காணப்படும் நடிகர் இஷான் கட்டருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது, இவரை 1,89,000 பேர் பின்தொடர்கின்றனர்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers