கூகுளின் சேவை நிறுத்தம்: காரணம் இதுதான்

Report Print Kabilan in இன்ரர்நெட்

கூகுள் நிறுவனம் URL Shortener சேவையை, ஏப்ரல் 13ஆம் திகதி முதல் நிறுத்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு, கூகுள் நிறுவனம் URL Shortener எனும் சேவையை அறிமுகம் செய்தது. இந்நிலையில், வரும் 13ஆம் திகதி முதல் இந்த சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 13ஆம் திகதி முதல், தற்சமயம் கூகுள் URL Shortener சேவையை பயன்படுத்துவோர் மட்டும், ஒரு வருடத்திற்கு புதிய சிறு Link-களை உருவாக்க முடியும் என மென்பொருள் பொறியாளர் மைக்கேல் ஹெர்மாண்டோ தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Smart URL-களை பயனர்கள் IOS, Android அல்லது இணையத்தளங்களில் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். ஏற்கனவே உருவாக்கப்பட்ட சிறிய Link-களில், தொடர்ந்து சேவையை பயன்படுத்த முடியும்.

அந்த வகையில், மார்ச் 30, 2019 வரை இந்த சேவைகள் சீராக இயங்கும் என வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கூகுள் சேவையை பயன்படுத்துவோர் Bitly அல்லது Ow.ly போன்ற சேவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்