உலகின் முதல் குறுந்தகவல் சேவை நிறுத்தம்: வெளியான தகவல்

Report Print Kabilan in இன்ரர்நெட்

Yahoo messenger சேவையை விரைவில் நிறுத்த உள்ளதாக Oath Inc நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 1998ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் திகதி, Yahoo messenger செயலியானது Yahoo பேஜர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர், 1999ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் திகதி அதில் மாற்றம் செய்யப்பட்டது.

இதுதான் உலகின் முதல் குறுந்தகவல் சேவை ஆகும். இந்நிலையில் இந்த சேவையை வரும் ஜூலை 17ஆம் திகதி நிறுத்த உள்ளதாக Oath Inc நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு காரணம் வாட்ஸ்அப், பேஸ்புக் மெசன்ஜர் மற்றும் இதர Chat செயலிகளின் ஆதிக்கம் தான் என்று கூறப்படுகிறது. Yahoo messenger சேவை நிறுத்தப்பட்டாலும், Yahoo மெயில் மற்றும் இதர சேவைகளை பயன்படுத்த Yahoo ID அப்படியே இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தகவல் பரிமாற்ற வழிமுறைகளில் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், பல்வேறு புதிய அம்சங்கள் உருவாக்கப்பட்டு வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்க உள்ளதாகவும் Oath Inc நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், Messenger செயலியின் Chat History-யை அடுத்த ஆறு மாதங்களுக்கு தரவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Oath Inc நிறுவனம், AOL Instant Messenger சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers