வாட்ஸ்அப் பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியென்றால் நிச்சயமாக இதை படியுங்கள்

Report Print Vijay Amburore in இன்ரர்நெட்

சமீப நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளை கடத்துபவர் என நினைத்து அப்பாவி நபர்கள் பலரும் அடித்து கொலை செய்யப்படுகின்றனர். இதற்கு எல்லாம் என்ன காரணம் என ஆராயும் பொழுது வாட்ஸ்அப் மூலம் பகிரப்படும் வதந்திகளே என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதனையடுத்து, வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களின் மூலம் அதிகமான வதந்திகள் பகிரப்படுவதை தடுக்கும் விதமாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு சில தினங்களுக்கு முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்திருந்தது.

அதில், "கொலைகள் நடைபெறக் காரணமாகும் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதில் தங்களுக்கான பொறுப்பு மற்றும் கடமையை வாட்ஸ்அப் நிர்வாகம் தட்டிக்கழிக்க முடியாது" என்று தொலைத் தொடர்பு மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சகம் அனுப்பியிருந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதுதொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் 10 சதவித அறிவுறுத்தல்களுடன் ஒருபக்க அளவில் விளம்பரம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஒரு தகவலை பார்வேர்டு செய்வதற்கு முன்பு அதன் உறுதித்தன்மையை உணர்தல் வேண்டும். பரிமாறப்படும் தகவலின் உண்மைத்தன்மையை அறிதல் வேண்டும், தகவல் மீது சந்தேகம் இருப்பின் அதனை பகிர்வதற்கு முன்பாக யோசித்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிரபல வார்த்தைகளால் பகிரப்படும் லிங்க்-ல் உள்ள எழுத்துகளை சரிபார்த்தல் வேண்டும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்