முட்டாள் என்றால் டொனால்டு டிரம்ப்பா? கூகுள் தேடலில் வெடித்த சர்ச்சை

Report Print Kabilan in இன்ரர்நெட்
128Shares

பிரபல தேடுபொறி தளமான கூகுளில் ‘முட்டாள்(Idiot)' என்று தேடினால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் புகைப்படம் தோன்றுவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பிரபல தேடுபொறி தளமான கூகுளில் ஏதேனும் தகவல் அறிந்துகொள்ள தேடும்போது, நம்பகத்தன்மையான பதில்களே கிடைக்கும்.

ஆனால், தேடலுக்கு கூகுள் உபயோகப்படுத்தும் Algorithm தகவல்களை ஒழுங்கமைக்கும் விதத்தில் குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டுகளும் உள்ளது.

இந்நிலையில், கூகுளில் ’முட்டாள் (Idiot)' என்று படப்பிரிவில் தேடினால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் படங்கள் தோன்றுகின்றன. இந்த விடயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப்பின் செயல்பாடுகளால் எரிச்சல் அடைந்த ஒன்லைன் செயல்பாட்டாளர்கள் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ’Reddit' என்ற இணைய தளத்தில் ‘முட்டாள்’ என்ற வார்த்தையை, டொனால்டு டிரம்ப்பின் படத்துடன் இணைக்கும் வேலையை தொடர் ஓட்டெடுப்பு மூலம் இவர்கள் உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

ஒன்லைன் போராட்டம் என்ற பெயரில் கூகுள் உபயோகிக்கும் Algorithm, இந்த தகவல்களை சேகரித்து வைத்துக் கொண்டு யார் அந்த வார்த்தையை தேடினாலும், டிரம்ப்பின் படத்தை காட்டுவது போல் இந்தக் குழு செய்துள்ளது.

இதற்கு முன்பு கூகுளின் தேடல் முடிவுகளில் ‘பப்பு’ என்ற ஹிந்தி வார்த்தைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் படமும், ‘பேகு’ என்ற ஹிந்தி வார்த்தைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் படமும் தோன்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்