பிரித்தானியர்களின் இணையப் பாவனை தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

இன்றைய காலகட்டத்தில் உலக அளவில் பல கோடிக்கணக்கானவர்கள் இணையத்தில் மூழ்கிக்காணப்படுகின்றனர்.

எனினும் வளர்ச்சியடைந்த நாடான பிரித்தானியாவில் இணையப்பாவனை தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஐந்தில் ஒரு பங்கினர் தாம் இணையத்தை பயன்படுத்துவதில்லை என குறித்த ஆய்வின்போது தெரிவித்துள்ளனர்.

Oxford Internet Institute (OII) மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆய்விற்காக 2,000 பிரித்தானியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 18 சதவீதமானவர்ளே தாம் இணையத்தை பயன்படுத்துவதில்லை என தெரிவித்துள்ளனர்.

இதற்கு அவர்களின் முதுமை மற்றும் ஏழ்மையே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இவர்களுக்கு உதவுவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என Oxford Internet Institute (OII) கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்