இந்திய இணையப் பாவனையாளர்கள் தொடர்பில் வெளியான மற்றுமொரு புள்ளிவிபரம்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

இந்தியாவில் சுமார் 451 மில்லியன் வரையானவர்கள் மாதம் தோறும் இணையத்தை பயன்படுத்தி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

அதேவேளை அதிக இணையப்பாவனையாளர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் சீனாவிற்கு அடுத்தாக இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றது.

இந்நிலையில் மற்றுமொரு தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது மாதாந்தம் இணையத்தை பாவனை செய்யும் 451 மில்லியன் மக்களில் 67 சதவீதமானவர்கள் ஆண்கள் எனவும், எஞ்சியவர்களே பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையினை Mobile Association of India (IAMAI) வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்தியாவின் மொத்த சனத்தொகையில் தற்போது 36 சதவீதத்தினரே இணையப் பாவனையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்போது சீனாவை பின்னுக்கு தள்ளி முதலாம் இடத்தை எட்ட முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்